உன்புன்னகை மென்வருடலில் பூத்தடி பூந்தோட்டம்
தென்றல் வருகையி லும்மலர வில்லை மலர்த்தோட்டம்
மென்குயில் கூவியபோ தும்மலர வில்லை மலர்த்தோட்டம்
உன்மென் வருகையில் மென்விரல் தொட்ட பொழுதினில்
உன்புன் னகைமென் வருடலில் பூத்தடி பூந்தோட்டம்
தென்றல் வருகையி லும்மலரா பூந்தோட்டம்
மென்குயில் கூவியபோ தும்மலரா பூந்தோட்டம்
புன்னகையில் உன்விரல் தொட்ட பொழுதினில்
மென்மையில் பூத்தன பார்