நண்ணா வறுமையெனும் நஞ்சு - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

வருவாய் வருகின்ற வண்ணவழி தேர்ந்து
கருத்துடன் கண்வைத்துக் காத்தும் – உரிமையென
எண்ணிச் செலவிட்டால் எண்ணிய சேர்ந்திடுமே;
நண்ணா வறுமையெனும் நஞ்சு!

– வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Nov-22, 9:01 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 31

மேலே