கருங்கல்லின் காட்சிப்பிழை

கடற்கரை மணல் வீடாய்
குளத்தின் நீர் வளையமாய்
மழை நேர வானவில்லாய்
விழியை வியக்கவைக்கும்
நிமிடநேர அழகு
முதல்காதல்
நினைவுக்கருங்கல்லில்
காட்சி பிழையாய்
வாழும் நாகரீக காதலை
இதயத்தில் அடியில் மறைத்து
நிகழ்காலத்தோடு நடைபழகு

எழுதியவர் : K.நிலா (15-Nov-22, 10:04 pm)
சேர்த்தது : Kநிலா
பார்வை : 122

மேலே