காதல் மகிழ்ச்சி

நேரிசை வெண்பாக்கள்

காதலென்றெப் போதுங் கதைக்கும் கழிசடை
சாதனை பேசானே சாதிமதம் --- ஓதல்
தினந்தினம் காதலை தித்திக்க பாட்டில்
புனையநஞ்சு பிஞ்சில் புகும்

கூடுநாய் காண்நின்ற குக்கலுக்கு மூச்சிரைக்க
தேடுமலைந் தேயெத் திசையும் -- வாடு
பயிரென மாறும் பயலை கிறுக்கி
எயினரும் கொல்வாராம் இன்று

நேரிசை ஆசிரியப்பா

உள்நாட்டு ஓநாயு மின்று காத்ல்
பேசி நாட்டின் சாதி மதம்விட்டார்
ஆண்பெண் கணக்கில் சமத்வம் பேசி
உடலுறவேக் காதல் என்று ஓடுவர்
பெற்றோர் சொல்லை மீறி
பின்சீர் கெட்டு சாவார் பாரே

திருமண கலாச்சாரம் ஒழிந்து சேர்ந்து
வாழ்ந்து பிள்ளை பெற்று சீரழியுm
அமெரிக்க கலாச்சாரம் நுழைய பாரத்
பண்பாடு மழிந்து மாறிடும்
நிலையும் சூழ்ந்து கொண்டதைப் பாருமே

பகுத்தறிவு பகலவ ரெனப்புகுந்து கெடுத்தார்
பாரதக் கலாச்சாரம் விளைவு வெற்றிடம்
புகுந்தது அமெரிக்கக் கலாச்சாரம் உடலுறவு
குடித்தனம் நடத்த வேண்டி சச்சரவு
பிடிப்பில்லா குடும்பமாக கொலையே மிச்சம்
இன்று டில்லியில் ஷிரதா என்ற
இந்து மங்கையை முசுலீம் பையன்
அப்தல் காதல் கொள்ள பெற்றோர்
மறுக்க கல்யாணம் செய்யாக் கூடி
வாழ்ந்தார் விட்டு விட்டிரண்டு வருடம்
என்ன மிலாவெட்டி யவலை முப்பத்து
ஐந்து துண்டாக்கி பலயிடத்தில்
வீசியும் பிடிபட்டான் காவலர் வசமே



.........

எழுதியவர் : பழனி ராஜன் (17-Nov-22, 11:28 am)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : kaadhal magizhchi
பார்வை : 156

மேலே