கூண்டு

காது வழிகேட்ட நகைச்சுவை
சிரிக்கமட்டுமல்ல....சிந்திக்கவும்
**** ***** ****--

கூண்டு


அவன் எம்.ஏ பட்டதாரி. கடைசிவரை
வேலை கிடைக்கவில்லை. சென்னை வந்தபின்பும்.
பல நாள் பட்டினி.பசி வயிற்றைக் கிள்ளியது. இனிமேலும் வாழ்வதில்
அர்த்தமில்லை.முடிவுக்கு வந்தான்.
கடலில் உயிர் விட பீச்சை நோக்கி
நடந்தான்....

வழியில் மிருககாட்சி சாலை(Zoo)
தென்பட்டது.
கடைசியாக ஒரு முறை முயற்சிப்போம் என உள்ளே நுழைய
மேனேஜர் கூப்பிட்டார்..
தம்பி இங்கே வாங்க!
தளர்ந்த நடையுடன் சென்று
தன் நிலையை விவரித்தவாறே..

சார்! ஏதாவது வேலை குடுங்கசார்.
சம்பளம் தரவேண்டாம்.சாப்பாடு
போட்டா போதும்..பசி சார்!..

மேனேஜர் ரொம்பவும் பரிதாபப்
பட்டார்...
இதோ பார் தம்பி! ஜுவில வருமானம்
இல்லை.மிருகத்துக்கே உணவு
போடமுடியல...அதுகெல்லாம்
பல நாள் பட்டினிதான்..

அப்படித்தான் மனிதக் குரங்கு
ஒன்னு போனமாதம் பட்டினியால
செத்துப்போச்சு..
அதுக்கின்னு நிறைய குழந்தைகள்
கூட்டம் வரும்..
இப்ப பிள்ளைங்களே வர்ரதில்லை.
கூண்டு காலியாத்தான் இருக்கு..

நீண்ட யோசனைக்கு பிறகு
பேசினார்...இதோ பார் தம்பி..
உன்னைப்பபாத்தா பாவமா இருக்கு..

நீ ஒன்னு செய்....அந்த குரங்கோட
தோலை நீ போட்டுக்கிட்டு குரங்கா நடி. கூண்டுக்குள்ள இரு..
பார்க்க வருகிறங்க கொடுக்கிற
பழம் பிஸ்கட் சாப்பிட்டுக்க...
உனக்கும் பசியாறும்..எனக்கும்
வருமானம் வரும்....

யோசித்தான்....நடைப்பிணமாக
பட்டினியால் சாவதை விட வெளியில்
தெரியாமல் குரங்காக நடிப்பது
மேல்..

ஓகே சார்...
தம்பி இந்த விஷயம் யாருக்கும்
தெரியக்கூடாது....

அடுத்த நாள் ..பட்டதாரி குரங்குத்தோலை போர்த்திக்கொண்டான்.அசல்
மனிதக் குரங்கானான்.
புதிதாக மனிதகுரங்கு..வெளியில்
போர்டு..
ஜுவிற்கு கொஞ்சம் கொஞ்சமாக
சிறுவர்கள் வரத்தொடங்கினர்..

கூண்டிற்கு அருகில் நல்ல கூட்டம்..
குழந்தைகள் பழம் பிஸ்கட் கொடுத்து வேடிக்கை செய்தனர்.
பலநாள் பட்டினி கிடந்த குரங்கிற்கு
ஏக குசி. நல்ல சாப்பாடு...
குழந்தைகளுக்கு விளையாட்டு
காட்ட கம்பிக்கு கம்பி தாவியது.
ஒரே கைத்தட்டு விசில் சத்தம்...தான்
மனிதன் என்பதையே மறந்தது.

கடைசி ஜம் உற்சாகத்தில் செய்ததில்
அடுத்த கூண்டிற்குள் போய்
விழுந்தது....

அந்தக்கூண்டில் புலி...
விழுந்த குரங்கை பார்த்த புலி
கோபத்தோடு உர்ரர்ர் என்று
உருமியவாறு நெருங்கியது.
பல நாள் பட்டினி வேற...

நெருங்கிய வந்த புலியைப்
பார்த்த மனிதக்குரங்கு இல்லையில்லை எம்.ஏ பட்டதாரி.பயத்தில் தொண்டை கிழிய
கத்தினான்...

காப்பாத்துங்க காப்பாத்துங்க...
நான் குரங்கு இல்லை..மனுஷன்
மனுஷன்...

பாய்வதற்கு தயாராக இருந்த புலி
குரங்கிடம் கிட்ட வந்தது.

ஏண்டா கத்துறே... நானும் புலி
இல்லைடா...நானும்
உன்னை மாதிரி தான் எம்.காம்
வேலையில்லாமே.

இந்தக் கலவரத்தின் போது அடுத்த
கூண்டில்
தூங்கிக்கொண்டிருந்த சிங்கம்
விழித்தவாறு மெல்ல புலியிடம்
வந்து

என்ன அண்ணே அங்கே சத்தம்?
என்றது...
இங்க பாருடா! அது சிங்கம்
இல்லைடா! நம்மல மாதிரிதான்
எ.எஸ்சி. என்றது.

**** ***** **-****** ******

எழுதியவர் : ரவிராஜன் (17-Nov-22, 2:26 pm)
சேர்த்தது : ரவிராஜன்
Tanglish : koondu
பார்வை : 45

மேலே