பயணம்

இந்தா பஸ்ஸீ கிளம்புது புடி

என்னது இது சீ வேணாம்

புடி

வேணாம்னு சொல்றேன்ல போ முதல விசில ஊதிட்டாங்க பாரு

ம் புடி அப்ப தான் கிளம்புவேன்

ஏய் எதுக்கு இதெல்லாம் நீ வச்சுக்கோ

புடி நான் கொடுத்தா நீ வாங்க மாட்டியா

இப்ப ஒன்னும் வேணாம் போதுமா

அப்ப நான் இனிமே இங்க வரமாட்டேன் சரியா

நான் அப்படியா சொன்னேன்

அவன் மௌனமாக கிளம்ப அவள் அவனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்

காற்று மோதி அவள் முடியை அவிழ்த்தது.கசங்கிய கண்களோடு கண்ணீர் முட்டி நிற்க.அவன் பேருந்தின் ஜன்னல் வழியே எட்டி பார்த்தான்.அவளை அழைத்தது போலிருந்தது.புடவையால் முகத்தை துடைத்துக் கொண்டாள்.

நான் வர்ற வாரம் வருவேன் நிச்சயமா அவன் உள்ளிருந்தே கத்தினான்

அவள் முகம் சுளித்தாள். முடிஞ்சா நான் கேட்ட அந்த கம்மல் அவள் அவனை விழித்தாள்

பேருந்து கிளம்பியது அவன் எதையோ கீழே போட்டான்

எடுத்த பிரித்ததும் அதில் அவள் கேட்ட அதே கம்மல்

அவர்கள் இடைவெளியை நீட்டித்தபடி பேருந்து சென்றுக்கொண்டிருந்தது

இன்னும் ஒரு வாரமிருக்கே அவனை சந்திக்க? அவள் கண்களின் விளிம்பில் நீர் திரள பேருந்தை பார்த்துக் கொண்டிருந்தாள்

அவர்கள் யார்?நண்பர்களா, காதலர்களா அல்லது கணவன் மனைவியா எதுவும் எனக்கு தெரியாது

அதே பேருந்தில் இராணுவ விடுப்பு முடிந்து, புது மனைவியை பிரிந்த ஏக்கத்தோடு தான் நானும் சென்று கொண்டிருக்கிறேன்...

எழுதியவர் : S. Ra (19-Nov-22, 3:54 am)
சேர்த்தது : Ravichandran
Tanglish : payanam
பார்வை : 156

மேலே