கற்காலம்

கற்காலம்!

நான் வாழ்ந்த காலம் அது,
எனக்கு சற்று அறிவு குறைவு
என்று நீங்கள் எல்லாம்
கூறிய காலம் அது.

ஒன்று மட்டும்
சொல்லுகிறேன்!

அணு குண்டுகள்
இல்லாத காலம் அது,
ஏவு கணைகள்
இல்லாத காலம் அது,
எந்த நேரம்
என் தலையில்
குண்டு விழும் என்று நான்
கவலைப் படாத காலம் அது,
"யாதும் ஊரே
யாவரும் கேளிர்..."
என்று கூவிய காலம் அது.

கோவில்கள் இல்லாத
காலம் அது,
ஏன்! கடவுளே இல்லாத
பொற்காலம் அது.

கற்கால மனிதன் நான்.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (19-Nov-22, 4:24 pm)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
பார்வை : 85

மேலே