உன் நினைவுகளும் என் கண்ணீரும் 555

***உன் நினைவுகளும் என் கண்ணீரும் 555 ***
உயிரே...
நீதான் என் உலகம் என்று
வாழும் என்னிடத்தில்...
என் பாசம் எல்லாம்
வேஷம் என்கிறாய்...
என் மனதுக்குள் இருக்கும்
உன்மீதான காதல்...
நான் மண்ணில் புதையும்வரை
உன்னுடன் பேசும்...
நீஎன்னோடு
பேசுவதில்லை என்றாலும்...
உன் நினைவுகள்
என்னோடுதான் பேசுகிறது...
அன்று ஆறுதல் சொல்லி
அரவணைக்க நீ இருந்தாய்...
இன்று
என்னை அரவணைக்க...
என்னருகில் உன் நினைவுகளும்
என் கண்ணீரும்தான்...
உன் புகைப்படம் பார்த்த
என் நண்பர்கள் கேட்டார்கள்...
நீ யாரென்று...
காய்ந்து போன இந்த மரத்திற்கு நீ
உயிர் கொடுக்கும் வேர் என்று சொன்னேன்...
இன்று மரத்தை கோடாரி கொண்டு
வெட்டி வீழ்த்துவது போல...
உன் வார்த்தை கோடாரியால்
என்னை தினம் கொள்கிறாய்...
என் அன்பை புரிந்துக்கொண்டு
உன் செல்ல தீண்டல்களோடு...
என்னை தீண்ட போவது
எப்போது என்னுயிரே.....
***முதல்பூ.பெ.மணி.....***