சேலை
சேலையில் ஓர் மயக்கம்
ஆஹா ஆடையை பற்றி
பேசுவதா என கோபம் வேண்டாம்.
ஆடைகள் ஆயிரம் இருந்தாலும்
ஆனந்த மயக்கம் உன்னில் உண்டு.
உடலின் இரத்தம் முழுவதும்
ஒன்று சேர்த்து
வட்டமாய் நடுநெற்றியில்
உறைந்துவிட்டேன் கண்மணி.
இமைகளும் போர் புரிகிறது
மூட மறுத்து.
மறைக்காதே கூந்தலே
காற்றில் நீ அசைய
அழகிய பூமுகம் மறைகிறது.
எத்தனை அலைகள் கூந்தலில்.
ஆர்ப்பரிக்கும் கடல் அலைகளை
எண்ணி விடலாம்.
ஆனால் பூ சூடும்
அந்த கூந்தல் அலைகளை
எண்ண மறந்து வாய் பிளக்கிறேன்.
அகன்ற காது மடல் வெளிர்நிறத்தில்
தொங்கும் தோட்டமாய் தோடுகள்.
அசைந்து அசைந்து ஆட்டம் போடுகிறது.
என் மனதின் தாளம்
கேட்டு விட்டதோ என்னவோ?
கண்ணில் கதிர்வீச்சு கொண்டு
அலையும் மர்ம பெண்ணே
எல்லாமும் அதிகம் தான் அதில்.
அன்போ, காதலோ, கண்ணீரோ
கட்டுக்கடங்காமல் வருகிறது.
சாயம் ஏற்றும் உதடுகள்
உன் கணக்கில் இல்லை.
இயற்கை அன்னை
சிவந்த மெருகை பதித்து இருக்கிறாள்.
எச்சில் ஈரம் பட்டு
மினு மினுக்கிறது.
நாசி வழி வரும் காற்றும்
இதய துடிப்பை எகிற செய்கிறது.
ஏன் கண்கள் கழுத்தை விட்டு
இறங்க மறுக்கிறது.
சேலையில் அரையாய்
மயக்கம் கண்டேன்.
கழுத்து வரை கண்டதிலே
முழுதாய் விழுந்தேன்.
உரிமை வரும் காலம்
கண்களின் தவம் முடிப்பேன்.