காலப் பெட்டகம்

பிறப்பும் இறப்பும்
நம் கையில்லை
உண்மைதான்

பிறந்து விட்டோமென்று
வாழாதே மனிதா
பிறப்பை உணர்ந்து
சிறப்பாக வாழ்வது
உன் கையில்தான்
என்பதை உணர்ந்து வாழு

காலமென்னும் பெட்டகத்தில்
நம் இறப்பின் காலமும் நேரமும்
நான்முகனால்
இறுதி செய்த பிறகுதான்
பிறப்பின் காலமும் நேரமும்
முடிவு செய்யப்படுகிறது

நம் வாழ்க்கையின் ரகசியமும்
அந்த கால பெட்டகத்தில்
அடங்கியிருக்கு என்பதை
அறிந்துக் கொள் மனிதா...!!

நீ வாழ்ந்த காலத்தின் சிறப்புக்களை உந்தன் இறந்தகாலம்
பெருமையோடு
சொல்லி மகிழ வேண்டும்
எதிர்கால சந்ததிகளுக்கு....!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (27-Nov-22, 6:34 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kaala pettakam
பார்வை : 238

மேலே