பொன்னான நேரம்

மனிதர்களில் சிலர்
அவர்களின் பொழுதை
போக்குவதற்கு
நம்முடன் வெட்டியாக பேசி
நேரத்தை கழிப்பார்கள்
நம் நேரத்தையும்
வீணடித்து மகிழ்வார்கள்....!!

மனிதர்களில் சிலர்
நம்முடன் மகிழ்வோடு
இருப்பதற்காகவே
தங்களின் நேரத்தை
நமக்காகவே ஒதுக்கி
நம்முடன்
பேசி மகிழ்வார்கள்....!!

முதல் வகை மனிதர்கள்
தங்களின் பொழுது போக்குக்காக
மற்றவர்களின்
"பொன்னான நேரத்தை"
வீணடித்து மகிழ்கிறார்கள்...!!

இரண்டாம் வகை மனிதர்கள்
தங்களின்
"பொன்னான நேரத்தை"
பிறரின் மகிழ்ச்சிக்காக
செலவு செய்து மகிழ்கிறார்கள்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (29-Nov-22, 6:41 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : ponnana neram
பார்வை : 218

மேலே