மழலையின் ஆற்றல்

வளராத செடியின்
மலராத மொட்டு !
தழைக்காத பருவம்
சளைக்காத உருவம் !
சுமக்குது பாரம்
உரைக்குது பாடம் !
தடையேது செயலாற்ற
தளிராக இருந்தாலும் !
மனவுறுதி இருப்பின்
மலையும் கடுகுதான் !
மழலையின் ஆற்றலை
மனதாரப் போற்றுவோம் !

பழனி குமார்
27.11.2022

எழுதியவர் : பழனி குமார் (29-Nov-22, 7:37 pm)
சேர்த்தது : பழனி குமார்
Tanglish : MAZHALAIYIN aatral
பார்வை : 1023

மேலே