செவ்வரி படர்ந்த காதல் சேல்விழிக்கு
செவ்விதழ் திறந்தால் செந்தமிழில் பாடுவேன்
செவ்வரி படர்ந்த காதல் சேல்விழிக்கு
அவ்வையின் வெண்பா ஆயிரம் எழுதுவேனுன்
திவ்ய தரிசனத்தில் தினமும் திளைப்பேன்
சில குறிப்புகள் :
செவ்வரி --பெண்களின் வெண்விழியில் செவ்வரி படர்ந்திருப்பது
சாமுத்திரிகா லட்சணம் .
செவ்விதழ்கள் இருக்கிறது கண்ணில் செவ்வரி இல்லையே என்று
பார்க்கும் பெண்ணை வேண்டாம் என்று சொல்லாதீர்கள்
சாமுத்திரிகா பட்டு வேண்டுமானால் கால் அரை டஜன் மாற்றாக
ஒருவேளை பெண்ணின் தந்தை offer செய்யலாம்
பத்மினி ஹன்சினி என்று ஐவகை பெண்களை சாமுத்திரிகா
லட்சண சாத்திரம் கூறும் .
அப்படிப் பெண்களைத் தேடிக் கொண்டிருந்தால் ஏர்போர்ட்
கன்வேயர் பெல்ட்டில் லக்கேஜ் சுற்றுவது போல் மேட்ரி மோனியால்
காலத்தை சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்க வேண்டியதுதான் !!!
பெண் என்பவள் வெறும் புறத் தோற்றம் அழகும் மட்டுமில்லை
பெண் என்பவள் உள்ளத்தின் உணர்வுகளின் உயிரோவியம்
என்பதை மனதில் வையுங்கள் .