காயம்
கோபம் இல்லையடி பெண்ணே
உள்ளத்தை கொடுத்தாய்
இல்லறம் செழிக்க
மேனியை காயம் செய்தாய்.
விழிக்கும் நேரம்
கைப்பேசி தேடலை தாண்டி
என்னவள் எங்கே என்றே
தேடினேன்.
நடை ஓசை கேட்டே
இருக்கிறாள் என்னவள்
தனிமை காட்டில் தத்தளிக்கும் பயணி
பாதை கண்டது போல் மகிழ்கிறேன்.
சுவாசத்தின் சூடு
எந்தன் மேனி தொட
நாம் பேசிய பேச்சுக்கள்
அவியாத ஆவியாக சுழல்கிறது.
நிரந்தரம் இல்லா வாழ்க்கையென
கதை பேசியவன்
மண்ணில்
உன்னோடு நிரந்தர இடம் வேண்டி
தினம் உருகினேன்.
அணைப்பு
அன்பு
காதல்
சண்டை
சமாதானம்
கூடல்
எல்லாம் காட்டிய பெண்
விட்டு செல்லும் போது
கோபம் இல்லையடி பெண்ணே
காயம் தான்.