காலை – மாலைப் போஜனத்தின் - நெய் - மோர் - பேதம் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

காலைக்(கு) எருமைநெய்மோர் காரத்தோ(டு) உண்ணலாம்
மாலைக்கா வின்னெய்மோர் வார்த்துணலா - மேலையண்ட
வெப்பப்புக் காலம் விரவிவர லாற்றுகளில்
ஒப்பப் பகற்கனற்கண்(டு) உண்!

- பதார்த்த குண சிந்தாமணி

காலையில் எருமை நெய், மோர், காரத்தோடு உண்ணலாம். மாலையில் பசுவின் நெய், மோர் இவற்றை உண்ணலாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Dec-22, 3:37 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 20

மேலே