வெண்டைக்காய் போட்டுவைத்த மோர்க்குழம்பு - அறுசீர் ஆசிரிய விருத்தம்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)
(1, 5 சீர்களில் மோனை)
வெண்டைக்காய் போட்டுவைத்த மோர்க்குழம்பே
..என்றனுக்கு விருப்பந் தானே;
கொண்டாட்டம் அதையுண்ணக் கூடியொன்றாய்க்
..காய்பறிப்போம்; கூட்டுஞ் செய்வோம்!
சுண்டைக்காய் போட்டுவைத்த சுடும்வத்தக்
..குழம்புமிகச் சுவைக்குந் தானே;
அண்ணன்மார் தம்பியர்க்கும் அதுமிகவும்
..பிடிக்குந்தான் அறிந்தே சொன்னேன்!
- வ.க.கன்னியப்பன்