நினைவெல்லாம் நீயே

நினைவெல்லாம் நீயே

விழிகள் வழியே இதயத்துள் நுழைந்தவனே/

விழிகள் பார்க்க நாம் இணைந்தோம்/

ஆயிரம் ஆயிரம் ஊடல்கள் வந்தாலும்/

ஊடலுக்குப் பின் கூடலே இல்லறம்

தாய் தந்தை தோழன் என

பன்முகத் தன்மை கொண்ட என்னவனே

பொருளீட்டச் சென்றாலும் தனிமையை உணர்ந்தேன்

வரும் வழி பார்த்து ஏங்கினேன்

எப்பிறவியிலும் என்னவன் நீ மட்டுமே

எப்பொழுதும் என் நினைவெல்லாம் நீயே

எழுதியவர் : இராசு (7-Dec-22, 11:15 am)
சேர்த்தது : இராசு
Tanglish : NINAIVELLAM neeye
பார்வை : 207

மேலே