வஞ்சியைக் கொஞ்சி மிஞ்சும்

நேரிசை வெண்பா


வஞ்சியின் ஆசைமித மிஞ்சி தளமதில்
கொஞ்சுவதாய் சொல்லி கொடும்பாவி -- அஞ்சா
வழுத்தி பிராணனை வங்கி வதைக்க
எழுத்தும் அறியாத தேன்


கிறுக்கிநான் கற்பதாய் இங்குவந்து கற்கான்
குறுவாளால் குத்துவன் கூற்று


எனக்கு ஒன்றும் தெரியாது ஏதோ கிறுக்குவேன் என்று நுழைந்தான்
ஒன்றையும் யாரிடமும் கற்காது. வேதாந்தி போல வயதுக்கு மீறி
உளறி கொட்டி மரியாதை யின்றி பேசி மாதம் நூத்தி ஐம்பது கிறுக்க
அதிகம் எழுதினேன் என்று நெஞ்சை கர்வமாய் நிமிர்த்துவது வேதனை

எழுதியவர் : பழனி ராஜன் (7-Dec-22, 7:16 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 102

மேலே