கவிஞர் தேசிக விநாயகம் பிள்ளை

தேசிக விநாயகம் பிள்ளை தமிழ் நாடு
பெற்ற அற்புதக் கவிஞர் கன்னியாகுமாரியில் பிறந்தவர்
நம்மில் பலரும் அவரது கவிதைகளை பள்ளி நாட்களில்
படித்திருப்போம்
எட்வின் ஆர்னால்ட் புத்தர் மீது எழுதிய LIGHT OF ASIA வை
ஆசிய ஜோதி என்று தமிழில் தந்தவர்
மலரும் மாலையும் என்ற நூலும் பிரசித்தியானது.
தேசிக விநாயகம் பிள்ளையை சிவாஜி சந்திக்க நேர்ந்தது . இவர் நடிகர் என்று அறிமுகப் படுத்தினார்ஒருவர் . சாப்பாட்டிற்கு என்ன செய்கிறாய் என்று சிவாஜியிடம் கவிஞர் பிள்ளை கேட்டார் பத்திரிகையில் எப்பவோ படித்த நினைவு
கவிஞரைப் போற்றி :--
தேசிக விநாயகம் பிள்ளை என்றோர் நற்கவிஞர்
மூசிக வாகனன் பெயரினைக் கொண்ட புலவர்
ஆசிய சோதி எனும்புத்தன் நூலினைத் தந்தார்
வாசித்துப் பார்தம்பி நீலக்குமரி கடல்தமி ழலையை !