காத்திருக்கிறேன் மீண்டும் ஒருமுறை 555
***காத்திருக்கிறேன் மீண்டும் ஒருமுறை 555 ***
ப்ரியமானவளே...
உடலைவிட்டு
உயிருக்குள் புகுந்து...
மனதை வசீகரம் செய்து
என்னை அடிமை படுத்தியது...
நம்
முதல் சந்திப்பு...
மழை மேகத்துக்கு நடுவில்
ஒளிரும் நிலவை போல...
அழகாய்
பிரகாசித்த உன் முகம்...
நீ உன் அன்பால்
அழகிய குரலில்...
முதன் முதலில் என்
பெயரை சொல்லி அழைத்ததும்...
அத்தனை சுகம்
அந்த பூங்காவில்...
தேன் சிந்தும்
உன் கன்னமும்...
மயில் தோகை கூந்தலில்
சூடிய முல்லைப்பூவும்...
நீ சிரித்தாள்
மல்லிகை மொட்டுபோல...
வரிசையாய்
இருக்கும் பற்களும்...
வில்லுக்கு வடிவம் கொடுத்த
உன் புருவமும்...
சாயம் பூசாத
உன் இதழ்களும்...
அத்தனை
அழகு உன்னில்...
பயணத்தின் அழகை
ரசிக்க வேண்டும் என்பார்கள்...
நானும் ரசித்தேன்
உன்னுடன் சேர்ந்து நடக்கையில்...
காத்திருக்கிறேன் மீண்டும்
ஒரு பயணத்திற்கு.....
***முதல்பூ.பெ.மணி.....***