கலி விருத்தம், கலித்துறை எழுத விரும்புவோர் முயற்சிக்கலாம்

தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் முயற்சிக்கலாம்!

கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
(1, 3 சீர்களில் மோனை)

வயிரவான் பூணணி மடங்கல் மொய்ம்பினான்
உயிரெலாம் தன்னுயிர் ஒக்க ஓம்பலால்
செயிரிலா உலகினில் சென்று நின்றுவாழ்
உயிரெலாம் உறைவதோர் உடம்பும் ஆயினான்! - கம்பன்

கலித்துறை
தேமா விளம் விளம் விளம் மா - வாய்பாடில் 1, 3 சீர்களில் மோனை வைத்து 4 அடிகளில் ஒரு கலித்துறை முயலுங்கள்.

போர்பு றங்கொடு, பொருந்தல ருரத்திறேய்த் தொளிர்வேற்
சீர்பு றங்கொடு திசைதொறு மிருளற மின்னி
வார்பு றங்கொடு வளர்முர சொலியென வதிர்ந்து
நீர்பு றங்கொடு நீன்முகில் முழங்கின மாதோ 2 நாட்டுப் படலம், முதற் காண்டம், தேம்பாவணி

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Dec-22, 10:33 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 18

மேலே