அழியாப் பேற்றினை யடைவோர் கருத வேண்டியன – அறநெறிச்சாரம் 209

நேரிசை வெண்பா

உட்கப் படுமெழுத்(து) ஓரிரண்(டு) ஆவதே
நட்கப் படுமெழுத்தும் அத்துணையே - ஒட்டி
இழுக்கா வெழுத்தொன் றிமிழ்கடல் தண்சேர்ப்ப!
விழுச்சார்வு வேண்டு பவர்க்கு 209

- அறநெறிச்சாரம்

பொருளுரை:

ஒலிக்கின்ற குளிர்ந்த கடல் துறையை யுடையவனே!

அழியா நிலையையடைய விரும்புவோரால் அஞ்சத் தகுவது இரண்டெழுத்துக்களால் ஆகிய வினையே;

விரும்பத்தகுவதும் அவ்விரண்டு எழுத்துக்களாலாகிய வீடே ஆகும்;

நட்பாகக் கொண்டு அதனின் வழுவாதிருக்கத் தகுவது ஓரெழுத்தாகிய ஆ (சிவஞானம்) ஆகும்.

குறிப்பு:

வேண்டுபவர்க்கு; வேற்றுமை மயக்கம்; வினை - நல்வினைகளும், தீவினைகளுமாம்;

வீடு – மோட்சம்; ஆ - சிவஞானம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Dec-22, 11:22 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 28

சிறந்த கட்டுரைகள்

மேலே