யாருமா நீ

ஒரு அரசியல் கட்சியின் தலைமை நிலையம். பாதுகாவலர்:
யாருமா நீ? இங்க்கே எதுக்கு வந்த?
######
யோ..‌ நீ செய்தித் தாள் எல்லாம் பார்க்கிறதில்லையா?
#@########
என்க்கு தமிலு பாடிக்கத் தெரியது.
@@@##
உம் நல்லாத் தெரியுது. நான் எத்தனை நகைக் கடையில் என் கைவரிசையைக் காட்டியிருக்கிறேன். செல்ஃபோனை புடுங்கிட்டு ஓடறதில ராணி. குழந்தைகளோடு தங்கச் சங்கிலி பெண்களோட நகைகளைக் கவர்றதில என்னை மிஞ்ச யாருமில்லை. என்னைப் பார்த்து யாருமானு கேட்கிறாய். நான் பெரிய படிப்பு படிச்சவ. திருட்டுல தான் அதிக வருமானம். இந்த நகர பிரபல (இ)ரவுடிகளே என் பேரைக் கேட்டா நடுங்குவாங்க. இன்னொரு தடவை நீ ஏதாவது பேசினா உன் தலைல ஒரு குத்து விட்டா தலை பின்னாடி திரும்பிக்கும். சாக்கிரதை.
@@@@@@@
தெரியம நாங் கேட்டு. மான்னிப்பு ஆமா. இருங்க்கோ மாலா (மாலை) எடுத்து வர்றன். பொட்டுட்டு உல்ல போங்க்கா. உல்ல யருகிட்டயும் சொல்லதீங்க. என்க்கு வேலா போயிடும்.
@@@@@@##
சரி பத்திரிகைக்காரங்க வருவாங்க. அவங்க எல்லொரையும் எதுவும் கேட்காமல் உள்ளே அனுப்பி வை. இல்லைனா வேலை.... போயிடும்

எழுதியவர் : மலர் (19-Dec-22, 5:21 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 105

மேலே