பாராட்டுரை

வாழ்த்துரை

எண்சீர் கழி நெடிலடி விருத்தம்.

எத்தனைத்தான் எழுதினுமே தமிழில் யாரும்
 .......செய்தாரில் லைத்தமிழ்மு ழுவர லாற்றை

மொத்தத்தில் தமிழ்த்தொடக்கம் குறிக்கா விட்டும்
 ........ முயன்றெழுதா பலர்மழுப்பி எழுதி னார்காண்

 எத்தனைநாள் மனவுறுத்தல் அருங்க ருத்து
........ தேடியாய்ந்து பலவற்றைப் புலனில் தேக்கி

அத்தனாமெம் சுப்பிரம ணியனார் பாது
 ........காத்தின்று கோர்த்தச்சில் கனியாய் ஈந்தார்

குறள் வெண்பா

கவின்தமிழ தன்வர லாறெழுதி மொத்தம்
அவிர்த்த நயமே அழகு

எழுதியவர் : பழனி ராஜன் (28-Dec-22, 5:47 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 94

மேலே