அவன் ஒரு நடுத்தர இளைஞன்

அவனாக தேடிய வாழ்க்கையில் அவனுக்கு கிடைத்தது என்னோவோ ஏமாற்றங்கள் தான், எதையும் மனதில் வைத்து கொள்ள விரும்பாத அவன் ஒவ்வொரு நாளையும் புத்துணர்ச்சியுடன் துவங்கி ஏமாற்றத்துடன் அந்த நாளை முடிக்கிறான்.
விடியல் என்பது தினமும் நடக்கும் நிகழ்வு ஏனோ அவனுக்கு அது எட்டா கனியாக உள்ளது? காரணம் அவன் அறியாத ஒன்று அல்ல.
செல்வச்செழிப்பில் வளர்க்கப்பட்ட அவன் ஒரு நாள் நாம் ஒரு அடிமாடாய் மாறுவோம் என்று கனவில் கூட கண்டு இருக்க மாட்டான்.
யாரோ ஒரு நல்ல மனிதரின் உதவியுடன் இரு பெண் பிள்ளைகள் மற்றும் மனைவி ஆகியோருக்கு அவனால் வணவு உறைவிடத்துடன் குறைந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற போராடிவரும் நடுத்தர இளைஞன்.

வேளைக்கு செல்லும் இடங்களில் எல்லாம் வேலையை வாங்கிவிட்டு ஊதியத்தை ஏமாற்றும் கூட்டத்தில் மாட்டிக்கொண்டு வெளியே வர துடிக்கும் நடுத்தர இளைஞன் அவன்.

ஒன்றை மட்டும் மனதில் வைத்து ஒவ்வொரு நாளையும் கடத்தி வரும் அவன் ஏமாற்றமும் மாற்றமும் ஒரு சொல்லில் மாறி விடும்பொழுது நம் வாழ்க்கை மாறாத என்ன?

எழுதியவர் : அறிவு தஞ்சை (3-Jan-23, 11:49 am)
பார்வை : 135

மேலே