நட்பு, நண்பன்

ஒட்டிய உறவெல்லாம் உன்னை விட்டு
விட்டு ஒட்டுதலைப் பிய்த்துக் கொண்டு
காணாது தூரம் போய்விடும் உன்னிடம்
பொருள் ஏதும் இல்லை என்று கேட்டப்
போதே அதனால் இதை அறிந்து
என்றும் உன்னை விட்டு ஓடாது
உனக்கு கைகொடுத்து தூக்கி நிறுத்தும்
தூய உறவு நட்பு மட்டுமே
என்று அறிந்து கொண்டு தூய
நட்பை தேடி நாடு நல்ல
நண்பனை சென்று அடைந்திடு
அவன் நடுக்க கடலில் சிக்கி தவிக்கும்
உனக்கு உயிர்த்த தோணியாவான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (9-Jan-23, 2:40 pm)
பார்வை : 590

மேலே