அடி தோழி

உன் சிறு சிறு குறும்புகள் என்னை மென்மையாய் தீண்டுதடி

செல்லமாய் நீ திட்டி விட்டு செல்லும் தருணங்கள் எல்லாம் என்னுள் அழகாய் பூக்குதடி

பல நேரம் உன் மெல்லிய பார்வையும் என்னை கொல்லுதடி

நட்புக் கொள்ளும் சிறு கிண்டலும் கேள்வி வாழ்க்கை என இருந்த எனக்கு

உன்னுடன் கை கோர்க்கும் போது நட்பின் ஆழமும் அர்த்தமும் நன்கு புரிந்ததடி

என் இதயம் கலந்தவளே இரண்டு ஒரு நாழிகை கூட தூரமாய் தெரியுதடி நீ தள்ளி நிற்கும் போது

வெகு நேரம் உரையாடினில் தெரியவில்லையடி

பிரியும் அந்த தருவாயில் கண்டேனடி உணர்வின் ஆழத்தை

என் அன்பு தோழிக்கு என் சிறிய மடல் குரு

எழுதியவர் : (29-Dec-22, 3:41 pm)
Tanglish : adi thozhi
பார்வை : 123

மேலே