பொங்கி வழியட்டும்
சர்க்கரைப் பொங்கலாய் வாழ்வு இனிக்கட்டும்.
செங்கரும்பாய் வாழ்நாள் இனி(த்)தே உயரட்டும்.
செங்கதிர் சூரியனாய் நாட்கள் ஒளிரட்டும்.
செந்நெல் வயலாய் பசுமை நிறையட்டும்.
ஒளிரும் மஞ்சளாய் மங்களம் பெருகட்டும்.
புதுப்பானை பொங்கலாய் புதுக்கவிதை பொங்கட்டும்.
எதிர்மறை எண்ணங்கள் முழுதாய் மறையட்டும்.
நேர்மறை எண்ணங்கள் மனதில் நிறையட்டும்.
இந்நாள் போல் எந்நாளும் விவசாயி வாழ்வில்
மகிழ்வும் நிறைவும் பொங்கி வழியட்டும்.