பிறக்கும் தை சிறக்கும் பார்
பிறக்கும் தை சிறக்கும் பார்
வளம் தரும்
நலம் வரும்
மனம் மலரும்
மணமும் உயரும்
குணம் சேரும்
குன்றாஇளமை கூடும்
வற்றாத செல்வம் சேரும்
வாழ்வாங்கு வாழ்வு நேரும்
கேடில்லா கீர்த்தி கிட்டும்
கிடைப்பறிய புதையல் பூக்கும்
பூசணிப்பூ வாசல் தேடும்
புது யோசனை வாழ்வில் வந்திடும்
வெற்றி மகன் பற்றிடுவான்
வேறுபாடு கலைந்திடுவான்
ஊறுபாடுஇலா உலகம்
ஓய்வறியா கதிரவன்
இயற்கை என்றும்
மாறுபாடு இலா மகத்துவம் இம்
மா... நிலத்தில்
ஏறு தழுவி பேரு பெற்று
ஏர் உழவு எமது வாழ்வு என என்னும்
உள்ளமெலாம் உயர்க
உயர்கல்வி தேடி உறுதியுடன் நாடி ஊக்கம் பெறுக
உலகம் வாழ்த்த
ஒய்யார வாழ்வு உத்தமமாக...
இனிய பொங்கல் தைத் திருநாள் வாழ்த்துக்கள்
அன்புடன்
பாளை பாண்டி