அவள் வரைந்த ரங்கோலி
பொங்கலுக்கு வீட்டின் முன்னே அவள்
ரங்கோலி கோலம் இட்டுக் கொண்டிருந்தாள்
நான் அதைப் பார்க்க என்னைச்சற்றே
கொஞ்சம் அவளும் நோக்க அவள்
கைவிரல்கள் இடையே இருந்த வண்ண
ரங்கோலி மாவு கீழே தெளித்திட
அதுவே ஒரு பெண்ணின் முகமானது
உற்றுப் பார்த்தேன் அதில் அவள்
இனிய அழகு முகம் கண்டேன்
எனக்காக மீண்டும் நான் வந்து
அவள் முகத்தை ரசித்திட அவளே
அறியாமல் அவள் வரைந்து சென்ற
அந்த ரங்கோலி....என்னைப் பார்த்து
இப்போது புன்னகைக்கின்றதே அங்கு