அவள் கண்கள்
துள்ளும் போது கயலானது அவள் கண்கள்
பாயும் அம்பானது கூறிய பார்வைத்தந்து
அன்பு ததும்பி அபிநயிக்க அதுவே
மலர் விழி யானது
ஓரத்தில் கொஞ்சம் காமம் சேர
ரம்பையின் பார்வையை மாறி
என்னை ஆட்கொண்டது அவள்
கண்களுக்கு ஆதலால் என்றும்
அடிமையே நான் நான்

