99 விளக்கை மறைப்பதாம் பெண்கல்வி விளக்காதது – மாதரைப் படிப்பித்தல் 6

கலிவிருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)

அரிவையர் நேசமும் ஆர அல்லினில்
விரிசுடர் விளக்கென விளங்கு வாரவர்க்(கு)
உரியநன் னூலுணர்த் தாமை கூடையால்
எரியொளி விளக்கினை மறைத்தல் ஒக்குமே. 6

– மாதரைப் படிப்பித்தல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”அன்புடனும், முழுமையான இருளினில் பரவலான ஒளிதரும் விளக்குப் போலவும் விளங்கும் பெண்களுக்குத் தேவையான நல்ல நூல்களைக் கற்றுத்தராமல் இருப்பது எரிகின்ற ஒளி பொருந்திய விளக்கைக் கூடையால் மறைப்பதற்கு ஒப்பாகும்” என்கிறார் இப்பாடலாசிரியர்.

அரிவை - பெண். நேசம் - அன்பு. ஆர - நிறைய. அல் - இருள்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Jan-23, 11:36 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 18

சிறந்த கட்டுரைகள்

மேலே