பாசறையில் பறையறைவித்தல் - பயிற்சிப் பாடல்
பாசறையில் பறையறைவித்தல்
7144 பூசலே; பிறிது இல்லை எனப் புறத்து
ஆசை தோறும் முரசம் அறைந்து என
பாசறைப் பறையின் இடம் பற்றிய
வாசல் தோறும் முறையின் வகுத்திரால்! 1
- முதற்போர் புரி படலம், யுத்த காண்டம், கம்பராமாயணம்
இதை வாசிக்கும் கவின் சாரலர் உட்பட கவிஞர்கள் பலரும் முயற்சி செய்யலாம், சீர்களை ஒழுங்கு படுத்தி, தக்க வாய்பாடுடன், என்ன வகைப்பாடல் என்றும் இலக்கணக் குறிப்புகளும் தரவேண்டும். அவலோகிடம் தளத்தையும் பயன்படுத்தலாம், அவலோகிதம் சரியாகப் பெரும்பாலும் வழிகாட்டுவதில்லை.
நாம் எழுதும் பொழுது, கணினியில் தட்டச்சு செய்து, எழுத்து, சொற்கள், சீர்களை எப்படி வேண்டுமானாலும் மாற்றம் செய்து கொள்ளலாம். பல நூறாண்டுகளுக்கு முன்னால் எழுதிய வள்ளுவர், கம்பர், சம்பந்தர் முதலியோர் ஓலைச்சுவடுகளில் தவறின்றி பலவித வாய்பாடுகளில் வெவ்வேறு வகையான பாடல்களை எப்படிப் பாடினார்கள் என்றால் வியப்பாயிருக்கிறது.