135 சீரிய கற்புடைய பெண் சித்திரமும் பாரார் - கணவன் மனைவியர் இயல்பு 27

தரவு கொச்சகக் கலிப்பா

ஓவியர்நீள் சுவரெழுதும் ஓவியத்தைக் கண்ணுறுவான்
தேவியையா மழைத்திடஆண் சித்திரமேல் நான்பாரேன்
பாவையர்தம் உருவெனின்நீர் பார்க்கமனம் பொறேனென்றாள்
காவிவிழி மங்கையிவள் கற்புவெற்பின் வற்புளதால். 27

- கணவன் மனைவியர் இயல்பு, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”ஓவியர் நீண்ட சுவற்றின் மீது வரைந்த சித்திரத்தைப் பார்ப்பதற்காக, தலைவன் தன் மனைவியை அழைக்க, நீல மலர் போன்ற கண்களையுடைய மங்கையான இவள் மலை போன்ற வலிமையான கற்புடையவளாதலால், ‘ஆண் சித்திரமானால் நான் பார்க்க மாட்டேன்; பெண்களின் உருவம் என்றால், நீர் பார்க்க நான் மனம் பொறுக்க மாட்டேன்” என்று தலைவனிடம் தலைவி கூறுவதாக இப்பாடலில் பாடலாசிரியர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை குறிப்பிடுகிறார்.

ஓவியம் - சித்திரம். கண்ணுறுவான் - பார்க்கும் பொருட்டு, காவி - நீல மலர், வெற்பு – மலை,
வற்பு – உறுதிப்பாடு, வலிமை

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Jan-23, 8:49 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 13

மேலே