பொழுது புலரும் வேளை

பொழுது புலரும் வேளை"
******** ********* ***********
சிறுகதை:
ஆக்கம்:அறந்தை ரவிராஜன்
*********

அதிகாலைப் பொழுது ...
தூக்கம் வரலை...மார்கழி இளங்குளிர்..இதமாக இருந்தது.
சரி..சற்று அழகப்பா கல்லூரி சாலை பூங்கா ஓரமாக வாக்கிங் போகலாம்னு ...
அடடா...இந்த நேரத்தில் வள்ளல்
அழகப்ப செட்டியாரை நினைவுகூர்ந்தே தீர
வேண்டும்...அழகப்பா கல்லூரி
வளாகம் கிட்டத்தட்ட ஐந்து கிலோமீட்டர் சுற்றளவு...எங்கு பார்த்தாலும் கல்விக்கூடங்கள்.
கல்விக்காக அரசாங்கத்துக்கு
அர்ப்பணித்தார் அனைத்தையும் இந்த மாமனிதர்...
இருபக்கமும் தொடர்ச்சியான
மரங்கள்.பூக்களின் வாசம்...கொன்றைமலர் பன்னீர்ப்பூக்கள் சாலையின் இருமருங்கிலும் கொட்டிக்கிடந்தது.
நடந்தால் நடந்து கொண்டே இருக்கலாம்..அப்படியொரு சாலை.

அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம்
நடைப்பயிற்ச்சியில் அதிகமாக ஆண்கள்..
வயதான பெண்கள் சிலர்....

நினைத்துக்கொண்டேன்..உயிர்மீதும் உடலின் மீதும் எவ்வளவு பயம்
இவர்களுக்கு..

காலையில் எழுந்திரிச்சு ஏழு மணிக்குள் சமைத்து குழந்தைகளை
எழுப்பி குளிக்க வைத்து டிபன்
ரெடி பண்ணி அவசர அவசரமாய்
கிளப்புவதற்குள் ஸ்கூல் வேன்
ஹாரன் அடிக்க ஓடிப்போய் குழந்தை
இழுத்துக்கொண்டு வேனில் ஏற்றிவிட்டு அப்பாடா என்று
பெருமூச்சு விட்ட அடுத்த நிமிடமே
ஆபீஸ் கிளம்பும் கணவருக்கு
டிபன் லஞ்ச் செய்து கொடுத்திட்டு
தானும் ஆபீஸ் கிளம்ப அரக்கப்பரக்க
குளித்த தலை காயாமல் பஸ்ஸை
பிடிக்கும் பெண்கள் என் கண் முன்னே நின்றனர்...ம்..அவர்கள்
எப்போ உடம்பைப்பற்றி நினைப்பது..வாக்கிங் போவது..

ஆண்களுக்கு மட்டும்தான் ரிடையர்மெண்டா..அடுப்பூதும்
பெண்களுக்கு...பெற்ற பிள்ளைகளுக்காக வாழ்நாள் பூராவும் வயதான காலத்திலும்
ஓடிக்கொண்டிருக்கிற உழைக்கும்
தாய்மார்களுக்கு....
மனது கனத்தது..

சார்... என்ன இந்த பக்கம்..வாக்கிங்கா ..குரல் கேட்டு
நினைவுக்கு வந்தேன்.

எதிரே...நான் ஆபீஸ் போகும் போது
என்னோடு ரயிலில் பிரயாணம் செய்து வந்த நண்பர்.வேறொரு
டிபார்ட்மெண்டில் வேலை பார்த்து
வந்தவர்.இப்போ ரிடையர்டு.

குட்மார்னிங் சார்...சும்மா இப்படி
ரிலாக்ஸ்டா..நடந்து ..என்று முடிப்பதற்குள்..

சரி..சார்..சுகர் பி.பி எல்லாம் கண்ரோல்ல இருக்க..என்ன டேப்லட்
எடுத்துக்கிறீங்க...சுகர் எவ்வளவு...ஆர்வமாய் என் முகத்தை நேராகப் பார்த்தார்.நான் திகைத்துப்போய்...பின் பதில்
சொல்வதற்குள்...
சார்...நான் சொல்றமாதிரி செய்யுங்க
அறுகம்புல் சார் காலைல வெறும் வயித்ல ..அப்புறம் ஆவாரம் பூ
நவாப்பழ கொட்டை கிடைச்சாலும்
தேவலை..
யாருக்குத்தான் சுகர் இல்லை..
கவலைப்படாதிங்க..டெய்லி
இங்க வந்திருங்க..சேர்ந்தே நடக்கலாம்..பேசிக்கிட்டே...

நான் ஒரு முடிவுக்கு வந்தவனாய்...
இவ்வளவு தூரம் சுகரைப்ற்றி
கிளாஸ் எடுத்தவர்கிட்டே எனக்கு
சுகர். பி.பி இல்லைனு சொன்னா
மனிதர் ரொம்ப ஏமாற்றம் அடைஞ்சுடுவார்...நான் நல்ல
ஆரோக்கியயமாக இரூக்கிறேன்
என்று சுகர் நானூறைத்தாண்டி
உள்ளவரிடம் சொல்லி அவரைப்
பதட்டப்பட வைக்க விரும்பவில்லை.

ரொம்ப தாங்ஸ் சார்..நீங்க சொன்ன
மாதிரி செஞ்சு சுகரை கண்ட்ரோலா
வச்சுக்கிறேன்..பார்க்கலாம் சார்.

மனிதர் ரொம்ப திருப்தியாகச் சென்றார்.
வீடு திரும்ப வந்து கொண்டிருந்த
நான்...இவ்வளவு அதிகாலையிலே..
வயிற்றுப்பிழைப்புக்காக..
சாலையோர காய்கறி விற்பனைக்கு
தயாரான வயதான மனிதர்கள்
பால் போடுபவர்...பரக்கப்பரக்க
செய்தித்தாளை அடுக்கி வினியோகிக்க கிளம்பும் சிறுவர்கள்
டவுன் பஸ்ஸிலிருந்து கூடைகளோடு
இரக்கமுடியாமல் தடுமாறும் பாட்டி..
இப்படி நான் பார்த்த யாரும்
ரோட்டில் செல்லும் யாரையும் கண்டுகொள்ளவில்லை..அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் பெரும்பாடு.

உலகில்தான் எத்தனை எத்தனை
மனிதர்கள். வேறுபட்ட உணர்வுகள்
வாழ்க்கை முறைகள்.

அவ்வளவு இதமான குளிரையும்
கடந்து மனது உஷ்ணமானது.

..

எழுதியவர் : அறந்தை ரவிராஜன் (30-Jan-23, 9:14 pm)
சேர்த்தது : ரவிராஜன்
பார்வை : 82

மேலே