நிலவே நீ எனக்கு அன்னையாக வா

👩👩 "நிலவை நான் கண்டேன்
            நீ ஓடோடி வருவாயா !
            உன் மீது பாசம் வைத்தேன்
            உன்னைக் கட்டி தழுவ நினைப்பேன் !
            உனக்கு முத்தம் கொடுக்க ஆசை உண்டு
            உன்னை எடுத்து நெற்றியில் பொட்டு வைப்பேன் !
            உன்னை அன்னையாக நினைப்பேன்
            எனக்கு அன்னைமடி வேண்டும்  !
            உன் மடிமீது என் தலை வைத்து உறங்குவேன்
            என்னைத் தாலாட்ட வருவாயா !
            உன்னைச் சிறு குழந்தையாக நினைப்பேன்
            உன்னைத் தாலாட்ட அங்கு ஓடி வருகிறேன் !
என்னைத் தாலாட்ட நீ நாளை வருவாயா !"👩👩

எழுதியவர் : சு.சிவசங்கரி (31-Jan-23, 11:59 am)
சேர்த்தது : சு சிவசங்கரி
பார்வை : 136

மேலே