அஞ்சு ரூபாய் நோட்டக் கொஞ்சம் மின்ன மாத்தி - அந்தமான் கைதி திரைப்படம்

அஞ்சு ரூபாய் நோட்டக்
கொஞ்சம் மின்ன மாத்தி
மிச்சமில்லக் காசு மிச்சமில்ல
அஞ்சு ரூபாய் நோட்டக்
கொஞ்சம் மின்ன மாத்தி
மிச்சமில்லக் காசு மிச்சமில்ல
கத்தரிக்கா விலை கூட
கட்டு மீறலாச்சு காலங்கெட்டுப் போச்சு
கத்தரிக்கா விலை கூட
கட்டு மீறாலாச்சு காலங்கெட்டுப் போச்சு

அஞ்சு ரூபாய் நோட்டக்
கொஞ்சம் மின்ன மாத்தி
மிச்சமில்லக் காசு மிச்சமில்ல

காலணா வித்தது இப்ப
நாலணாவா போச்சுது
கருப்பட்டி வெல்லத்துக்கும்
கடும் பஞ்சம் ஆச்சுது
காலணா வித்தது இப்ப
நாலணாவா போச்சுது
கருப்பட்டி வெல்லத்துக்கும்
கடும் பஞ்சம் ஆச்சுது

எப்படி பிழைப்பது இந்த நாட்டிலே
ஏய்ச்சிப் பிழைக்கும் சிலர்
ஏற்றமுடன் வாழ்கிறார்
ஏழை மக்கள் பட்டினியால்
ஏங்கி மனம் வாடுறார்
ஏய்ச்சிப் பிழைக்கும் சிலர்
ஏற்றமுடன் வாழ்கிறார்
ஏழை மக்கள் பட்டினியால்
ஏங்கி மனம் வாடுறார்

மிச்சமில்லக் காசு மிச்சமில்ல
அஞ்சு ரூபாய் நோட்டக்
கொஞ்சம் மின்ன மாத்தி
மிச்சமில்லக் காசு மிச்சமில்ல

மேடைப் பேச்சைக் கேட்டே
மேடைப் பேச்சைக் கேட்டு கேட்டு
காதடச்சுப் போகுதே
மேலே மேலே திட்டம் போட்டு
காலமும் வீணாகுதே
மேடைப் பேச்சைக் கேட்டு கேட்டு
காதுடச்சுப் போகுதே
மேலே மேலே திட்டம் போட்டு
காலமும் வீணாகுதே

வேலையின்றி அகதிகள் போலே
வேலையின்றி அகதிகள் போல்
மனதில் ஏங்குறார்
வீடில்லாமல் ஏழை மக்கள்
வீதியிலே தூங்குறார்
வேலையின்றி அகதிகள் போல்
மனதில் ஏங்குறார்
வீடில்லாமல் ஏழை மக்கள்
வீதியிலே தூங்குறார்

மிச்சமில்லக் காசு மிச்சமில்ல

அஞ்சு ரூபாய் நோட்டக்
கொஞ்சம் மின்ன மாத்தி
மிச்சமில்லக் காசு மிச்சமில்ல
கத்தரிக்கா விலை கூட
கட்டு மீறாலாச்சு காலங்கெட்டுப் போச்சு
அஞ்சு ரூபாய் நோட்டக்
கொஞ்சம் மின்ன மாத்தி
மிச்சமில்லக் காசு மிச்சமில்ல

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Feb-23, 5:04 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 11

மேலே