தண்மையின் கனவில் காட்சியும் அவளே - எழுசீர் ஆசிரிய விருத்தம்
எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)
(விளச்சீருக்குப் பதில் சில இடங்களில் மாங்காய்ச்சீரும் வரலாம்)
கண்களில் தெரியா உயிர்க்கெலாம் அவளின்
கண்களே விருந்தினை வழங்கும்!
கண்களில் தெரிந்த காதலன் நெஞ்சில்
கனவினை வழங்கிடல் தானோ?
விண்ணினில் முகிலும் விளங்கிடும் நிலவும்
வேல்விழி அழகுதான் அவளோ?
தண்மையின் கனவில் காட்சியும் அவளே!
தருவாளோ இன்பமும் எளிதில்?