55 அழியா ஞான உடம்பளித்தோன் ஆசான் - ஞானாசிரியன் பெருமை 2

கலிவிருத்தம்
(விளம் விளம் மா மா)

கானலெ னப்படு காய மிதப்பன்
தானவ மேபுவி தங்க அளித்தான்
ஈனமி லாரியன் என்று மொருங்கா
ஞானவு டம்பினை நல்கி னனன்றோ. 2

- ஞானாசிரியன் பெருமை, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”பொய்யான நீர் போலத் தோன்றும் இந்த உடம்பினை நம்மை ஈன்ற தந்தை வீணாக இவ்வுலகில் தங்க அளித்தான். குற்றமில்லாத ஞானாசிரியன் என்றும் அழியாத ஞான உடம்பை நமக்கு அருளினான்” என்று ஞானாசிரியனின் பெருமையைக் கூறுகிறார் இப்பாடலாசிரியர். .

கானல் - நீர்போல் தோன்றும் வெளி. அவம் - வீண். ஆரியன் - ஆசான். ஒருங்கா - அழியா.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Feb-23, 7:50 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 25

சிறந்த கட்டுரைகள்

மேலே