எனக்குள் நீ
இன்னும் நீடிக்கிறது எனக்குள்
நீ பார்த்த பார்வை
இன்னும் பீடிக்கிறது எனக்குள்
நீ பேசிய வார்த்தை
இன்னும் நீள்கிறது எனக்குள்
நீ காட்டிய பரிசம்
இன்னும் மீள்கிறது எனக்குள்
நீ பட்ட வெட்கம்
இன்னும் தாழ்கிறது எனக்குள்
நீ தொட்ட வெப்பம்
இன்னும் மூழ்குகின்றது எனக்குள்
நீ விட்ட மூச்சு
இன்னும் தேய்கிறது எனக்குள்
நீ சிரித்த சிரிப்போசை
இன்னும் பாய்கிறது எனக்குள்
நீ பக்கத்தில் இருந்தது