401 இரந்தும் ஏழைகளுக்கு நல்லோர் ஈவர் - கைம்மாறு கருதா உதவி 19

கலிவிருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்.
விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து;
2, 3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்.
விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு.
(முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்;
மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)

காரி டத்திரந் தேனுங் கயநதி
நீரி னைப்பணை யெங்கு நிறைத்தல்போல்
யாரி டத்திரந் தேனு மறமுளார்
பாரி டத்துப் பகுப்பர் வறிஞர்க்கே. 19

- கைம்மாறு கருதா உதவி, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”குளமும் ஆறும் மழையிடம் வேண்டிப் பெற்றேனும் நீரை வயல்களெங்கும் நிறைத்து வைக்கும். அதுபோல், நன்மை நாடும் நல்லோர்கள் யாரிடமாகிலும் வேண்டிப் பெற்று இவ்வுலகத்தில் ஏழைகள் இருக்கும் இடத்தைத் தேடிப் போய் பகுத்து அளிப்பார்கள்” என்கிறார் இப்பாடலாசிரியர்.

கார் - மழை. இரத்தல் - வேண்டிப்பெறுதல். பணை - வயல். அறம் – நன்மை, பார் - உலகம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Feb-23, 7:00 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 17

சிறந்த கட்டுரைகள்

மேலே