605 அறிவாற்றல் பெருமைகளால் ஆண்பெண் ஒப்பே - மாதரைப் படிப்பித்தல் 1

கலிவிருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
(விளத்தின் இடத்தில் மாங்காய்ச் சீர் வருவதும் உண்டு)

நூலெலா மைந்தரே நுவன்ற தாலவர்
வேலெனும் விழியர்க்கோர் விகற்பங் கூறுவர்
பாலெனும் வேற்றுமை யன்றிப் பங்கமென்
மாலெனு மைந்தர்க்கு மடந்தை யர்க்குமே. 1

- மாதரைப் படிப்பித்தல், நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

பிற்காலத்து நூல்கள் பெரும்பாலும் ஆடவர்களாலேயே ஆக்கப் பெற்று அறிவுறுத்தப் பெற்று வந்தன; அதனால் கால வேறுபாட்டால் மாலுற்றுக் கூரிய வேல் போலும் கண்ணையுடைய பெண்பாலர்க்குச் சிறிது குறைவும் கூறுவாராயினர்.

ஆண்பால் பெண்பால் என்ற பால் வேறுபாடே யல்லாமல் அறிவு, பெருமை முதலிய ஆற்றல்களில் எவ்வகை வேறுபாடும் இல்லை. ஆதலின், அவர்களுக்கும் கல்வியை ஆண்களுக்கொப்பவே கற்பித்தல் வேண்டும்.

மைந்தர் - ஆண்கள். நுவலுதல் - சொல்லுதல். விகற்பம் - வேறுபாடு; குறைவு.
பங்கம் - குற்றம். மடந்தை - பெண். பால் - ஆண்பால், பெண்பால்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Feb-23, 4:40 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 17

சிறந்த கட்டுரைகள்

மேலே