கண்ணன் என் தெய்வம்
கண்ணன் எனது தாய் தந்தை
இன்னும் எல்லாம் அவனே எந்தை
என்னிறைவன் எனது இருடீகேசன் அவனே
கருணா சாகரன் பகவன் அவனே
அவன் கருணைக்கு எல்லை இல்லை
குடி, குலம். கோத்திரம் இல்லை
மனிதர் தேவர் விலங்கென்று இவை
எல்லாம் கடந்து நம்மை வந்து
அடைவது அது அது கேட்பதெல்லாம்
'அவன்' மீது நாம் காட்டும் தூய
பக்தி அவனே கதி என்று
அவன் நாமமே சொல்லி சொல்லி
'அவன்' பணியில் இருப்பது