155 காதலர்க்கு எம் மெலிவினை முகிலே உரைமின் - கணவன் மனைவியர் இயல்பு 47

தரவு கொச்சகக் கலிப்பா

ஈண்டிவண் வருவலெனும் இறைவருகி லரவரைத்
தீண்டிய கிரணமதால் தீண்டுதி யெனைவெயிலே
தாண்டிய வளியவர்மெய் தடவியென் னுடல்படர்வாய்
மீண்டில ரிடமெனது மெலிவினை யுரைமுகிலே. 47

- கணவன் மனைவியர் இயல்பு
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”இப்பொழுது இங்கு வருவேன் என்று கூறிச் சென்ற தலைவர் இன்னும் வரவில்லை. அவரைத் தீண்டிய கதிரால் என்னையும் தீண்டுகின்றாய் ஞாயிறே! அவர்மேல் தழுவி தாண்டி வரும் காற்றே! நீ என்மேலும் படர்கின்றாய்.

மேகமே! கூறியபடி, மீண்டும் வராத தலைவரிடம் எனது உடல் மெலிவினை, நீ போய் அவரிடம் சொல்” என்று காதலரைக் காணாது தன் உடல் மெலிவதனைக் காதலனிடம் தெரிவிக்குமாறு தலைவி மேகத்திடம் கூறுகிறாள்.

முகில் - மேகம். இறைவர் - தலைவர். கிரணம் - கதிர். வெயில் - ஞாயிறு.
வளி - காற்று. படர்தல் - படுதல்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Mar-23, 8:43 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 24

சிறந்த கட்டுரைகள்

மேலே