கவிபாடும் காவியம்

அவளொரு காவியம்
விழியசைக்கும் வினாடியில்
விண்ணைத் தொடும்
வல்லமை கொண்டவள்....

அவள் விழித்தாரகையே
தூரிகையேந்தும் அற்புதமது,
கேட்டால் ஓவியம்
வரைந்ததில்லை யென்று
பொய் யுரைப்பாள்...

அவள் விழி சிமிட்டும்
ஒவ்வொரு முறையும்
ஓராயிரம் ஓவியங்களை
வரைவதை அவளே
அறியாளோ?

அவள் விழிப்பார்வை,
யென் விழி ஊடுருவும்
பொழு தெல்லாம்
குருதி வடிக்குமென்
இதயம்! கேட்டால்
வன்முறையே
தெரியா தென்பாள்!!!

அவளின் கார்குழலைக்
கண்டு இரவென்று
நம்பி உறக்கம் தொடர்ந்த
அனுபவம் பல உண்டு...

அவள் நீராடி வரும்
பொழுதில் பனிபடர்ந்த
இரவென்று நினைந்து
சுகமான உறக்கம் கொண்ட
நாட்கள் பற்பல...

ஒவ்வொரு அசைவிலும்
அவளின் செவி துவாரத்தில்
அமர்ந்து கர்வமாக நாதம்
இசைக்கும் அனிகலனாக
யாம்மிருக்க வரம்வேண்டிய
அனுபவங்களும் பற்பல...

அவள் கால்கொலுசிடம்
ஜதி பயில காத்திருக்கும்
எண்ணற்றவர்களில்
நானும் ஒருவன்...

நடனம் கற்ற
தில்லை யென்பாள்,
அவளின் நடையே
ஆயிரம் நடனத்திற்கு
ஈடென் றறியாமல்!

கவிபாட அறியாது
என்றுரைக்கும் காவியமவள்,
அவளிதழ் உதிர்க்கும்
ஒவ்வொரு சொல்லும்
ஒரு கவிதையென்பதை
அறியாத பேதையவள்....

அவள் ஒரு காவியம்
கவிபாடும் காவியம்,
அவளை நித்தம்
தரிசிப்பதே நான் பெற்ற
பெரும் பாக்கியம்!!!

எழுதியவர் : கவிபாரதீ (22-Mar-23, 11:11 am)
சேர்த்தது : கவிபாரதீ
Tanglish : kavipaadum kaaviyam
பார்வை : 160

மேலே