மன்னாதி மன்னர்
#மன்னாதிமன்னர் ..
பாகம் .. ஒன்று
மன்னா!
என்ன?
உங்களைப் பார்க்க ஒரு இளைஞன் வந்திருக்கிறான். அனுமதி தருகிறீர்களா?
என்ன மந்தியாரே! அந்த இளைஞனுக்கு பேரொன்றும் இல்லையா?
இருக்கிறது, மன்னா.
ஏன் நீர் பெயரைச் சொல்லவில்லை? இப்பொழுது சொல்லும். அந்த இளைஞன் பெயர் என்ன?
பேரானந்தம்.
என்ன சொல்கிறீர்?
ஆம், மன்னா. அப்படித்தான் சொன்னான்.
அப்படி என்றால் .. ?
பேரானந்தம் என்று.
எனக்கென்னவோ அந்த இளைஞனின் பெயர் ஆனந்தம் என்றுதான் இருக்கவேண்டுமே தவிர, பேரானந்தம் என்று இருக்க வாய்ப்பில்லை.
மன்னா, நான் மீண்டும் ஒருமுறை சென்று சரியாகக் கேட்டு வரட்டுமா?
வேண்டாம், வேண்டாம், வேண்டவே வேண்டாம். காவலாளியிடம் சொல்லி, அந்த இளைஞனை அழைத்துவரச் சொல்லுங்கள்.
அப்படியே ஆகட்டும், மன்னா!
.. தொடரும் ..