கண்ணனும் ராதையும் கண்ணன் கீதம்

பிரிந்தாவனத்தில் தாச கோபியருடன்
பெரிதே ராஸக்ரீடை செய்து ஆடி
வந்தான் கண்ணன் ஆனந்த மாகவே
ராதையும் அங்கிருந்தாள் கண்டு மகிழ்ந்திடவே
குழலூதி வந்தான் கண்ணன் மோகன
ராகம் இசைத்து கோபியரும் அதில்
கட்டுண்டு கண்மூடி இப்போது
ராதை கண்திறந்து பார்க்க கண்ணன்
அங்கில்லை அங்கில்லை கோபியரும் கூட......
எங்கோ மாயமாய் மறைந்தான்....
அலறிய ராதை, ;கண்ணா , கண்ணா
நீயெங்கே சென்றாய் என்னைமட்டும்
இந்தப் புன்னைக் காட்டுனிலே இப்படி
தனியே விட்டு விட்டு என்று 'யே ஓடும்
நதியே யமுனையே எங்கண்ணனை
நீ கண்டாயோ, என்று அலற்றி கொள்ள
எங்கிருந்தோ வந்தான் மாய கண்ணன்
பின்னே இருந்து பூங்கோதை ராதையின்
சிற்றிடையை மெல்லப் பற்றி வேய்ங்குழல்
வூதி வந்தான் மாயன் ராதையுடன்
ரசாக் க்ரீடை செய்து என்னில்பாதிநீ
நீதான் ராதே நீயறியாதது ஏதும் இல்லை
பின் ஏனடி இந்த சோககீதம் பாடி
அலைந்தாய் சொல்வாயோ என்காதல் கிளியே
என்றான் மாயன் மாயன் ......

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (14-Apr-23, 1:40 pm)
பார்வை : 77

மேலே