உன்னை நிலவில் உலவிடப் பார்த்தால் மனம்துள்ளுதே
மின்னல் ஒளிவீசும் மேற்குவா னத்தினில் வானவில்லும்
கன்னல்போல் பேசிடும் காதலின் புன்னகை யாளெழிலும்
தென்றல்மென் காற்றினில் பூப்போல் அசைந்திடும் பூங்குழலி
உன்னை நிலவில் உலவிடப் பார்த்தால் மனம்துள்ளுதே