தலைவரின் தகுதி

அண்ணே, நீங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறீர்கள். நம்ம கட்சிக்கும் வெற்றியைத் தேடித் தர்றீங்க. அந்த இரகசியத்தைக் கொஞ்சம் சொல்லுங்க ஐயா.
@@@@@
சொல்லறேன். ஒரு தலைவர் உடல் பயிற்சி செய்து நோய் நொடி இல்லாமல் பாத்துக்கணும். நல்ல குரல் வளம். கத்திக் கத்திப் பேசணும். ஒரு சொல்லுக்கும் இன்னொரு சொல்லுக்கும் தகுந்த இடைவெளி விட்டுப் பேசவேண்டும். நிறைய பொய்களைப் சொல்லிப் பேசணும். சொன்ன பொய்களை திரும்பத் திரும்ப பேசினால் அந்தப் பொய்களை உண்மை என்று மக்கள் நம்புவார்கள். புதிய புதிய பொய்களை அவிழ்த்துக் கொட்டிட்டே பேசணும்.
@@@@@
அண்ணே, எதிர்கட்சியின் தோல்விக்கு என்ன காரணம்?
@@@@#@
அந்தக் கட்சித் தலைவர் கரகரனு குரலில் பேசறாரு. ஆதாரத்தோடு பேசறாரு. ஆதாரங்களைப் பத்தி மக்களுக்கு ஒண்ணும் தெரியாது தம்பி. கத்திக் கத்தி பொய் பேசறவங்களைத் தான் மக்கள் நம்புவாங்க. எதிர்கட்சியைப் பத்தி சராமாரி குற்றச்சாட்டை சொல்லணும். மானநட்ட வழக்குப் போட்டா கூச்சப்படாம நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்கணும். இதுதான் என் வெற்றியின் இரகசியம். மக்களைச் சிந்திக்க விடக்கூடாது. அவர்கள் சிந்திக்கும் திறனை கொஞ்சம் கொஞ்சமாக சிதைக்கணும். அரசியலில் முடிசூடா மன்னனா நான் இருப்பதற்கு இதெல்லாம் தான் காரணம்.

எழுதியவர் : மலர் (15-Apr-23, 7:21 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 90

மேலே