செவ்வாய் கோவைப் பழமாக

கண்ணாக நின்றது ஞாயிறோ
பெண்ணாக வந்தநீ திங்களோ
உண்மைக்கோ வைப்பழம் செவ்வாயோ
பெண்மை நடந்ததோ அழகாக


---வாலியின் இனிய பாட்லைப் போற்றும் வகையில் அவரது கற்பனை வழி
இக்கவிதையைப் புனைந்தேன்

ஞாயிறு என்பது கண்ணாக
திங்கள் என்பது பெண்ணாக
செவ்வாய் கோவைப் பழமாக
சேர்ந்தே நடந்தது அழகாக
---இப்பாட்டில் வரும் சில இனிக்கும் காதல் வரிகள்

நேற்றையப் பொழுது கண்ணோடு
இன்றையப் பொழுது கையோடு
நாளையப் பொழுதும் உன்னோடு
நிழலாய் நடப்பேன் பின்னோடு
---கடைசி வரியில் சொல்லையும் பொருளையும்
பாருங்கள்
ஞாயிறு திங்கள் செவ்வாய் என்று மூன்று கிழமைகளையும்
உவமையாக வைத்து வாலி எழுதிய நான் மிகவும் ரசித்த
இலக்கிய சுவைமிகு பாடல்

வாலி ஒரு வசந்தத் தென்றல்

எழுதியவர் : கவின் சாரலன் (16-Apr-23, 9:39 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 51

மேலே